நெதர்லாந்தில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,90,000 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வட ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த H5N8 பறவைக் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் H5N8 பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியிடப்பட்டன.
பறவைக்காய்ச்சலை தடுக்கும் நோக்கிலேயே குறித்த அளவிலான வாத்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விவசாயப் பொருட்கள் உற்பத்தியில், உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது நெதர்லாந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.