கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவருடைய மரணத்தை தாங்க முடியாமல் கியூபா அரசு 9 நாட்களை தூக்க நாட்களாக அனுசரித்து வருகிறது.
பிடல் காஸ்ட்ரோ இறந்த பின்பு அவர் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை அனைத்தும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் காஸ்ட்ரோவைப் பற்றிய சில தகவல்களும் வெளியாகியுள்ளன. மார்த்தியின் பிறந்தநாள் விழாவிற்காக நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது.
நாட்டிலேயே இன்றளவிலும் பெரிய கட்டிடம் அதுதான் என கூறப்படுகிறது. அதைத் திறந்து வைக்க காஸ்ட்ரோ வந்துள்ளார். அவர் ஒரு காரிலும், அவருடன் வந்தவர்கள் மற்றொரு காரிலும் வந்தனர். ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் காஸ்ட்ரோவின் காரை திறந்து வைத்ததாகவும் மற்றபடி அவரைச் சுற்றி எந்த ஒரு பாதுகாப்பு படையும் இல்லை என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கியூபா நாட்டில் நிர்வாகத்தில் இருக்கும் எந்த தலைவரின் புகைப்படமும் எங்கும் இருக்காது. நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தன்வசம் வைத்திருந்த காஸ்ட்ரோவின் படம் கூட எங்கும் தென்படவில்லை. ஆனால் அதிசயமாக ஹவானா பல்கலைக்கழகத்தில் மட்டும் அவரது ஒரே ஒரு படம் இருந்தது என கூறப்படுகிறது.