பருவம் அடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் தவறாமல் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இயற்கை நிகழ்வான இந்த மாதவிடாய் சுழற்சியானது, பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது.
ஆனால் இந்த மாதவிடாய் சுழற்சியானது, 40 நாட்களுக்கு மேல் வராமல் இருந்தால், அவர்களின் உடல் நிலையானது ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தமாகும்.
எனவே தாமதமான மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் உடனே மருத்துவரை பார்த்து அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
மாதவிடாய் தாமதம் அடைவதற்கு என்ன காரணம்?
- பெண்களின் அதிகமான மன அழுத்தம் காரணமாக, அவர்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சுரப்புகள் குறைகிறது. இதனால் கருமுட்டைகள் உருவாவது தாமதமடைந்து மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- பெண்களின் உடல்நிலைகள் திடீரென சரியில்லாமல் போவதால், ஏதேனும் நோய்களின் வெளிப்பாடாக மாதவிடாய் வருவது தாமதம் அடைகிறது.
- அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, இரவு மற்றும் பகல் நேரம் என்று ஷிப்டுகள் அடிக்கடி மாறுவதால், தாமதமான மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- கர்ப்பத்தடை மருந்துகளை பயன்படுத்துதல் அல்லது புதிய மருந்துக்களை சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக மாதவிடாய் தாமதம் அடைகிறது.
- பெண்கள் அளவுக்கு அதிகமாக உடல் எடையை கொண்டிருந்தால், அவர்களின் உடம்பில் உள்ள ஹார்மோன்கள், மாதவிடாயின் சுழற்சியை மாற்றி அமைத்து, அல்லது மாதவிடாய் ஏற்படுவதை நிறுத்தி விடுகிறது.
- நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியம் அற்றதாக இருந்தால், நமது உடம்பிற்கு போதுமான ரத்தம் கிடைக்காது. எனவே உடம்பிற்கு போதுமான ரத்தமின்மைக் காரணமாக மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.