செல்பி பிரியர்களுக்கான நற்செய்தி! வந்துவிட்டது AirSelfie

செல்பி….ஸ்மார்ட்போன் உலகையே ஆக்கிரமித்து கொண்டிருக்கும் வார்த்தை.

செல்பியால் எத்தனையோ விபத்துக்கள் நேர்ந்தாலும், கொண்டாட்டங்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது செல்பி தான்.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்பி ஸ்டிக்குகள், ஆனால் இதை தூக்கி சாப்பிடும் அளவுக்கு வந்துள்ளது AirSelfie Camera.

உள்ளங்கை அளவே இருக்கும் இந்த கமெராவை பயன்படுத்தி படங்களை எடுக்கலாம்.

உறுதியான Anodized Aluminum Case மூலம் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கமெரா 94.5மிமீ நீளமும், 67.4மிமீ அகலமும், 10.6மிமீ தடிமனும் அளவை கொண்டது, இதன் மொத்த எடையும் 52 கிராம் மட்டுமே.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக்கூடிய இந்த கமெரா, தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் பறக்கும் தன்மை கொண்டது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்பை நமது போனில் நிறுவுவதன் மூலம் சுலபமாக பயன்படுத்தலாம்.

இதன் அடிப்பகுதியில் Altitude சென்சார் மற்றும் Stability கமெரா மூலம் வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

வருகிற 2017ம் ஆண்டு மார்ச் மாதம் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.625-0-560-350-160-300-053-800-668-160-90-3 625-0-560-350-160-300-053-800-668-160-90-4