எளிமையாக சொல்ல வேண்டுமானால், “வாங்க பழகி பாக்கலாம்…” என சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவை அழைப்பது போன்றது தான் டேட்டிங். டேட்டிங் செய்ய விருப்பமாக இருந்தாலும், ஆண்களில் இந்த ஏழு வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லையாம்…
வகை #1
“நான் இதுவரைக்கும் யார பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம்-னு யோசிச்சதே இல்ல. உன்ன பாக்குற வைக்கும்..” என ஸ்டேட்மென்ட் கொடுக்கும் டயலாக் ஆண்களை பெண்கள் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
வகை #2
நான் மிகவும் ஜோவியலாக பழகக் கூடிய நபர், சோசியல் பர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் டேட்டிங் போக பெண்கள் விரும்பிவதில்லையாம்.
வகை #3
எதற்கெடுத்தாலும் ஏதோ ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பதில் எழுதுவது போல மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை.
வகை #4
டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப் படுவதில்லையாம். டேட்டிங் என்பது பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருப்பது என்கின்றனர் பெண்கள்.
வகை #5
பணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும், ஆண் ஆணாக நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
வகை #6
தான் இதையெல்லாம் சாதித்துள்ளேன், நான் இதை எல்லாம் வென்றுள்ளேன் என தற்பெருமை அடிக்கும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் அதிக ஈகோ காண்பிப்பார்கள். பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.
வகை #7
எல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களை டேட் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.