சிறுமி ஜெசிகா நல்லடக்கம்: நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி

புற்றுநோயால் கடும் துயரத்துக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி ஜெசிகாவின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் லங்காஷைர் பகுதியில் குடியிருந்து வந்த 4 வயது சிறுமி ஜெசிகா வீலன் கடந்த ஓராண்டாக neuroblastoma எனும் கொடிய புற்றுநோய் தாக்குதலால் கடுமையாக துன்பப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது தந்தை ஆண்டி வீலன், சிறுமியின் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் படும் துயரத்தை உலகறிய செய்தார். சிறுமி ஜெசிகாவின் குறித்த புகைப்படம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடும் துயரம் அனுபவித்து வந்த சிறுமி ஜெசிகா கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடலை பொலிஸ் குதிரை வண்டியில் வைக்கப்பட்டு பிரதான சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

குறித்த இறுதி ஊர்வலத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிறுமி ஜெசிக்காவுக்கு இறுதியனஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஜெசிகாவின் பாடசாலை தோழர்கள் ஒன்று கூடி கண்ணிர் மல்க தங்களின் அன்பு தோழிக்கு பிரியாவிடை அளித்துள்ளனர். மேலும் ஞாபகார்த்தமாக பலூன்களை பறக்கவிட்டுள்ளனர்.

நிரம்பி வழிந்த கூட்டம் கண்டு மனநிறைவுடன் நன்றி தெரிவித்த ஆண்டி வீலன், பொதுமக்களின் ஆதரவு தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் செய்துள்ளதாகவும், கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.625-0-560-350-160-300-053-800-668-160-90-7 625-0-560-350-160-300-053-800-668-160-90-8 625-0-560-350-160-300-053-800-668-160-90-9 625-0-560-350-160-300-053-800-668-160-90-10 625-0-560-350-160-300-053-800-668-160-90-11