மேல் நீதிமன்ற நீதிபதியை கொலை செய்ய முயற்சி?

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசூரியவை கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பல்லேகலே பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் இந்த கொலை முயற்சி பற்றிய சூழ்ச்சித் திட்டத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் பணியாற்றி வரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரினால் தமக்கு இந்த விடயம் கூறப்பட்டதாக அந்தக் கைதி தெரிவித்துள்ளார்.

தும்பர சிறைச்சாலையின் பொறுப்புதிகாரி இது குறித்து எழுத்து மூலம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தும்பர சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த கொலை முயற்சி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.