தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக அவசியம் கொடுக்க வேண்டிய ஒன்று என்று உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் முதல் ஒருமணி நேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆனது தாய், குழந்தை உறவை நெருக்கப்படுத்தும் என்றும் பிறந்த குழந்தை தாயின் அரவணைப்பில் பால் குடிக்கும்போது அதனுடைய இதயதுடிப்பு சீராகிவிடும் என்றும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே குழந்தை பிறந்தவுடன் அடுத்த ஒரு மணி நேரம் என்பது தாய், சேய் ஆகிய இருவருக்குமே பொற்காலமாக கருதப்படுகிறது.