விஷால் நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன் உள்பட பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின், தற்போது மலையாளத்தில் ‘பத்து கல்பனாக்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டது.
இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட மீரா ஜாஸ்மின், ‘கற்பழிப்பு குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.பாலியல்ரீதியாக பெண்களை தாக்குபவர்களுக்கு வலிமிகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதைப்போன்ற நபர்களுக்கு ஆண்மைத்தன்மையை நீக்குவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்க முடியும்’ என்று ஆவேசமாக பேசினார்.
இவ்வாறு தண்டிக்கப்பட்டால்தான் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபெண்ணை தொடுவதற்கான தைரியம் வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.