உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க என்ன செய்ய வேண்டும்??

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

செம்பருத்தி

செம்பருத்திப்பூவின்  இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு வெயிலில் வைத்து எடுத்து பிசைந்து சாறு எடுத்து சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீர் அடைந்து இரத்தம் விருத்தியாகும்.

தேவையான அளவு செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து  நன்றாக பிசைந்து சாறு எடுத்து சாறுடன் சர்க்கரை கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி 1 தேக்கரண்டிஅளவு நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீர் அடைந்து இரத்தம் விருத்தியாகும்.

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சம்பழச் சாற்றில் தோய்த்து சாப்பிட்டு வர, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும்.

முருங்கை கீரை

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.