அட்டகத்தியாய் அறிமுகமான நடிகை அதன்பின் சின்ன ஹீரோ, சின்ன இயக்குநர்கள் என்ற வட்டத்தில் இருந்து மேலே வரவே இல்லை.
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகி விடலாமா என்ற யோசனையில் இருக்கும்போதுதான் ஒல்லி நடிகரின் அண்ணன் இயக்குநரின் பேய் பட வாய்ப்பு வந்தது.
அதனைக் கெட்டியாக பிடித்துகொண்டவர் படத்தில் பேயாக மிரட்டியுள்ளாராம்.மேல்மட்ட இயக்குநர்கள், ஹீரோக்களின் நட்புக்காக காத்திருந்தவருக்கு அந்த வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது. எனவே கிளாமர், பார்ட்டி என அதிரடியாக மாறிப்போயிருக்கிறார்.
பெரிய வாய்ப்புகள் வரும் என்று சமீபகாலமாக வருகின்ற சின்ன பட வாய்ப்புகளை பாத்தும்மா… அரசனை நம்பி புருசனை… கைவிட்ட கதையாக மறுக்கிறாராம்.