நீங்கள் பிறந்த மாதமும், உங்கள் குணங்களும் பலன்களும் தெரிந்துக்கொள்ளலாம்!

நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும்! தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15 க்கும் பெப்பிரவரி 15 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.

தை – (ஜனவரி 15 – பெப்பிரவரி 15) | மாசி – (பெப்பிரவரி 15 – மார்ச் 15) | பங்குனி – (மார்ச் 15 – ஏப்ரல் 15) | சித்திரை -(ஏப்ரல் 15 – மே 15) | வைகாசி – (மே 15 – யூன் 15)| ஆனி – (யூன் 15 – யூலை 15) | ஆடி – (யூலை 15 – ஆகஸ்ட் 15) | ஆவணி – (ஆகஸ்ட் 15 – செப்டெம்பர் 15) | புரட்டாசி – (செப்டெம்பர் 15 – அக்டோபர் 15)| ஐப்பசி – (அக்டோபர் 15 – நவம்பர் 15) | கார்த்திகை – (நவம்பர் 15 – டிசம்பர் 15) | மார்களி – (டிசம்பர் 15 – ஜனவரி 15).

தை மாதத்தில் பிறந்தவர்கள்

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசுசெலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவுசெய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள்
வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள்.

இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பிமற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம்மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாயமாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம்தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால்வெற்றிகள் பெருகும்.

இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப்பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள்.அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால்என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாகஇருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்றபெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள்.

இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள்இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம்இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்றுகணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு. காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும்கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்தகுழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே
நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது.இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமைஉடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன்கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள்.

இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்புபிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டுபொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாகஎண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள்.

இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால்வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல்
திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள்அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள்
கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள்.

அடிக்கடி வீட்டிற்குஉறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாகவைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால்அதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்குஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும்.தங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்துஇவர்கள் மாறுபட்டவர்கள்.

அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில்அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில்பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால்இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்தகுழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம்
இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள்விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள்ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்குஅடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் திரைப்படத்தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும்குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள்படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.சினிமா கவர்ச்சி அதிகம்.

எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம்.கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்குபெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள்.

எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப்பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம்அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி
நடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதுநல்லது.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவுமகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும்,அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம்
சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதைநிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில்இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

குறிப்பாக
அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை.உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு.இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்கவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்துஒதுங்கிப்போவார்கள்.

உங்களை திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும்பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில்முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு பிடிக்காது. சூரியனின் பலத்தால்உங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும்.சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார்.
இன்னும் கொஞ்சநாள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும்பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள்மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாகமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும்,உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப்பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள்.

இந்த கோபத்தை அடக்க நீங்கள்பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும்.பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாகஇருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது.
இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்தமாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கவேண்டும். வாரம் ஒரு முறையாவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட
வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கிநீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை,பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமைகொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம்ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள்முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது.உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்புஇல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்

வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான்இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பலஅனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான்இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன்
உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும்இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள்திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள்.

இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதைபெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்துதங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமைஅதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்ததொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர்துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்துவைத்திருப்பார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும்அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களைவிட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரைவிடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்தமாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காதஅளவிற்கு செலவழிந்து போவதுண்டு.

செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும்,வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டியஅவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில்ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால்பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வுஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள்.பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள்முகத்தில் விழிக்கமாட்டார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல்அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கிஅப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்குஇதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன்அமைவான்.

இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால்காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும்நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல்
ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம்காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களைஅடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில்மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்துமற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள்.இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும்என்றும் கருதுவார்கள்.

அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒருவேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால்வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்தமாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்குசெல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள்.

இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால்எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும்உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்துஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில்பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவைபிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறுசெய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள்.

எரிந்தும் விழுவார்கள்.இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாகஇருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரியவேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்திஅற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்யதயங்குவார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாகவிரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாகஇருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனிமாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டிவாங்கும் குணம் உடையவர்கள் அல்ல.

அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனேதிருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலைபார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால்வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்துமீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது.

இந்தமாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்குஅதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால்சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்தகற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ
அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராகஇருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தைவேறு யாராலும் காட்ட இயலாது.

குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள்வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்தமாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும்.தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் எனசொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களைபேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்கவேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதைமட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும்முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால்பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும்.

இவர்கள் அரசியலில்ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள்.இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதேநேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம்ஞாபகசக்தி அதிகம்.

இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும்.இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்புகொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையேமுடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்.

இவ்வாறுசெய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில்முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால்பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்தபெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில்மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

ஆவணி மாதம் பிறந்தவர்கள்

ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள்.பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாகஇருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற
குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவேஅமைந்திருக்கும்.

இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம்தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின்பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டிகுழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில்பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில்
இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம்என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசிமாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக
மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரேமாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும்இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர
குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம்.

அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின்உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில்விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன்கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால்அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சிசெய்வார்கள்.

அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்குஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்விஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த
மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராகஇருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல்ஏற்படும்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல்போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராதமுன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக்கண்டுபொறாமைப்படுவதுண்டு.

இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும்சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ளயாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல்துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

புத்தகம் படிப்பதில்இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களைதட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறைசெய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்தஇடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும்சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு.

இயற்கையாகவேஇந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு
லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள்.இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரியகுறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள்.
இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால்வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒருலட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம்
பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களைசாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடுசாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இந்த மாதத்தில் பிறந்தபெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன்வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகஇருப்பார்கள்.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம்அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய்தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களைதிருமணம் செய்துகொடுக்கலாம்.

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள்.இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில்காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரியதிட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதிகொண்டவர்கள்.

இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துபொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம்பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த
ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம்.

உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூடஅசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில்தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம்உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாகவாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்தமாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமானஒன்றாகும்.

நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்தமாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள்.தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும்.கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூடஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள்.

இந்தமாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால்இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும்.இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும்.அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால்அந்த பயத்தைப் போக்கிதுடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில்வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்கவேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்தஅனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள்.
எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும்.

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தகுழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகைஇடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின்காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள்இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டுசெய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பதுமிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டுஅடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள்பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்தமாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்தகார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்தபெண்கள்வணங்கிவந்தால்சகலசவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள்.

இவர்கள்குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களைதிருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம்செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை.இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறுமனஸ்தாபங்கள் வரலாம்.

இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்கயாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்புஅதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள்தவிர்க்க வேண்டும்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள்

குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன்இருக்க வேண்டும் எனவிரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதைமுடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம்,அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால்இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம்கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும்என விரும்புவார்கள்.

இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில்சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டுஎதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒருசைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதேநேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள்.இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள்முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள்அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும்வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள்.

அதே நேரம்படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில்அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள்ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமானவாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.