கடல் அரிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமையின் காரணமாக மேற்கு கடல் எல்லையில் உள்ள தீவுகள் இன்னும் சில காலங்களில் முழுமையாக அழிவடையும் ஆபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மாரவிலயில் இருந்து கற்பிட்டிய வரையிலான கடல் பகுதி இவ்வாறு பாதிப்பிற்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தின் போது வென்னப்புவ, மாரவில கடற்கரைக்கு மணல் நிறப்பப்பட்டு கடலில் அடித்து செல்லப்பட்ட பிரதேசங்களை தரைப்பகுதியாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அதன் பின்னர் அதற்காக உரிய அணைக்கட்டு ஒன்றை நிர்மாணிக்காமையினால் அந்த பிரதேசம் மீண்டும் கடலினால் அழிவடையும் ஆபத்தை சந்தித்துள்ளது.
கிட்டத்தட்ட 3000 குடும்பங்கள் வாழ்ந்த பல்லியவத்தை தீவில் தற்போது வரையில் 50 குடும்பங்கள் மாத்திரமே வசிப்பதாக கூறப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பல்லியவத்தை பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 வீடுகள் கடலினால் அழிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.