காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையை சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து புதிய வாடகை வண்டி முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் காதலர்களுக்கான பொது இடங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் பொது இடங்களில் அவர்கள் ஒன்று கூடுவதால் சில சமூக பிரச்சனைகள் ஏற்படுகின்றன..

இதனால் இதற்கு தீர்வாக முச்சக்கரவண்டி டெக்சி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று பேஸ்புக் பக்கத்தில் யோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிலோமீட்டருக்கு 50 ரூபாய் செலுத்தி தங்கள் நிறுவனத்தில் வாடகை வண்டி ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் பொது இடங்களில் காதல் ஜோடிகள் தோன்றுவதை தவிர்த்துக் கொள்ள முடியும். இதன்மூலம் சமூக பிரச்சினைகளை தவிர்க்க முடியும் ஆலோசனை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பு வியாபார நோக்கமாக இருந்தாலும், கலாசாரத்தை பேணுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.