பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

கொலம்பியா நாட்டில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்க கால்பந்து இறுதி சுற்றில் விளையாடுவதற்காக பிரேசில் நாட்டில் இருந்து இன்று காலை விமானம் புறப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் உள்ள Medellin என்ற விமான நிலையத்திற்கு புறப்பட்ட இந்த விமானத்தில் கால்பந்து வீரர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விமானம் சேர வேண்டிய இடத்திற்கு செல்லாததால் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சற்று முன்னர் கிடைத்த தகவலில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்துப்போனதால் விமானம் Cerro Gordo என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

எனினும், விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.