கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்திற்கான 2017 வரவுசெலவை முன்வைத்த முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.
தற்போது கஷ்டபிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கஷ்டப்பிரதேச கொடுப்பனவாக 1750 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனை மாற்றி 7500 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் மாகாண அபிவிருத்திக்காக மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியை 25 இலட்சம் ரூபாவில் இருந்த 50 இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண அமைச்சுகளுக்கான வரவு செலவு 2017 மீதான விவாதம்நேற்று ஆரம்பித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.