1. அப்பாச்சி மேடு – நீலிமலைக்கு அடுத்த மலை
2. அழுதா நதி – பம்பை நதியின் கிளை நதி
3. அத்தாழ பூஜை – அர்த்தசாம பூஜை
4. ஆறாட்டு – ஐயப்பன் பம்பை நதியில் நீராடிச் செல்லும் விழா.
5. இடைத்தாவளம் – இளைப்பாறும் இடம்.
6. உதயணன் – கரிமலைக் கோட்டையில் வாழ்ந்து வந்த ஒரு காட்டுக் கொள்ளைக்காரன்.
7. ஐயப்ப மந்திரம் – ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி பதவி ஏற்கும்பொழுது தந்திரி சொல்லிக் கொடுக்கும் ரகசிய மந்திரம்.
8. கல்பாத்தி கோவில் – தேரோட்டம் நடைபெறும் முக்கியமான ஐயப்பன் கோவில்.
9. காணிப்பொன் – சன்னிதானத்தில் சுவாமிகள் பாதத்தில் வைத்து பூஜை செய்து தரும் காசு.
10. காந்தமலை – பொன்னம்பல மேட்டின் மற்றொரு பெயர்.
11. கொச்சு கடுத்தன் – ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர்.
12. கொச்சு வேலன் – ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர்.
13. சகஸ்ர கலசாபிஷேகம் – 1008 கலசங்கள் வைத்து பூஜை செய்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் வழிபாடு.
14. சிரம்பிக்கல் மாளிகை – பந்தளத்தில் ஐயப்பனது திருவாபரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரண்மனை.
15. சீவேலி – சன்னதியைச் சுற்றி வரும் சுவாமியின் திருவுருவ ஊர்வலம்.
16. சீரப்பஞ்சிரா மூப்பன் – ஐயப்பனுக்கு ஆயுதப் பயிற்சியும் உடற்பயிற்சியும் அளித்தவர்.
17. தாழமண் – பூஜைகளுக்கு தலைமைப் பொறுப்பேற்பவர்
18. பம்பா சத்யா – தைப் பொங்கலுக்கு முதல் நாள் பம்பையில் நடத்தப்படும் அன்னதானம்.
19. பந்தளம் – ஐயப்பன் வளர்ந்த ஊர்.
20. பாண்டித் தாவளம் – மாளிகைபுரம் சமீபம் மருத நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தங்குமிடம்.
21. பிரதிஷ்டை தினம் – வைகாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் சபரிமலை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். அன்று ஒருநாள் மட்டும் நடை திறந்து தரிசனம் கிடைக்கும்.
22. புத்தன் வீடு – மகிஷியைக் கொல்ல ஐயப்பன் சென்ற பொழுது தங்கிய இடம். எரிமேலியில் உள்ளது மகிஷியை வதம் செய்த வாள் இன்றும் புத்தன் வீட்டில் உள்ளது.
23. பூங்காவனம் – சபரிமலைக் கோவிலும் அதனைச் சுற்றியுள்ள இடத்தையும் அழைக்கும் பெயர்.
24. பூதநாத கீதை – ஐயப்பன் பந்தள மன்னனுக்கு உபதேசித்த ஆன்மீகத் தத்துவங்கள்.
25. நாயாட்டு விளி – பதினெட்டாம்படியின் கீழ் நடத்தப்படும் சாஸ்தாவின் கதையைப் பாடும் ஒரு சடங்கு.
26. வாவர் – ஐயப்பனின் நண்பர்.
27. வலியக் கோவில் கல்- பந்தள ராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய ஐயப்பன் கோவில்.
28. விஷூ கை நீட்டம் – ஆண்டு தோறும் நல்லது நடக்க அர்ச்சகர் கையால் சித்திரை முதல் நாளில் பணம் பெறுவதாகும்.
29. ஹரிஹராத் மஜாஷ்டகம் (ஹரிவராசனம் பாடல்)- அர்த்தசாம பூஜைக்கு பின் நடைசாத்தும் முன் பாடப்படும் பாடல். ஐயப்பனுக்கு பாடும் தாலாட்டு என்று கூறுவார்கள்.
30. ஐயப்பன் விளக்கு – முதன் முறையாக சபரிமலை செல்லும் கன்னி ஐயப்பமார்கள் நடத்தும் சடங்கு.