இந்த நயன்தாராவிற்கு கெட்ட பின் வந்த ஞானம்…!

பார்த்திபனின் கதை திரைக்கதை இயக்கம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் அகிலா கிஷோர்.

பார்ப்பதற்கு கிட்டதட்ட நயன்தாரா போல் இருந்ததால், அந்த படம் வெளிவருவதற்கு முன்பே அவரை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தது இயக்குனர்கள் கூட்டம்.

ஆனால் பார்த்திபன் சார் எனக்கு கொடுத்த அறிவுரைப்படி நான் அவசரம் அவசரமாக படங்களை ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

நிதானமாகத் தான் ஒப்புக் கொள்வேன். அதுவும் இந்த படம் வெளிவந்த பின்புதான் புதுப்பட ஒப்பந்தங்கள் என்று கூறினார்.

படமும் வந்தது. நல்லவேளையாக பெரிய வெற்றியும் பெற்றது. அதற்கப்புறம் வந்தது சிக்கல். நான் ஆபாசமாக ஆடை அணிய மாட்டேன்.

தேவைக்கு அதிகமாக கதாநாயகர்களுடன் நெருங்கி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறி வந்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் தவிர்த்து வந்தார்.

அது மட்டுமல்ல. தன்னை நிஜ நயன்தாரா என்றே நினைத்து விட்டார்..! நயன்தாரா பயன் படுத்தும் அதே கேரவன் வாடகைக்கு எடுத்து வர வேண்டும் என்று கட்டளை விதித்தார்.

தன்னுடன் மூன்று பேர் வருவார்கள். தவிர தனி காஸ்ட்யூமர், தனி மேக்கப் மேன், குடை பிடிக்க ஒரு பையன் வேண்டும் என்றார்.

அதிர்ந்து போனார்கள் இயக்குனர்கள்..! இல்லம்மா…நீ நயன்தாரா மாதிரி தான். நயன்தாரா இல்லவே இல்ல என்று புரிய வைக்க போராடினார்கள்.

ம்கூம்.. டூப் நயன் ஒத்துக் கொள்ளவே இல்லை. விளைவு..சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை..! இப்போதுதான் தான் நயன்தாரா இல்லை என்று உணர ஆரம்பித்திருக்கிறார்,அகிலா கிஷோர்.

அவரை மக்களும் மறந்து போனார்கள். இயக்குனர்களும் மறந்து போனார்கள். இந்த நேரத்தில்தான் அந்த இன்ப அதிர்ச்சி.

மூன்றாம் உலகப் போர் என்ற படத்தில் அப்படத்தின் கதாநாயகன் சுனில் குமாருடன் அகிலா கிஷோர் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

பட நிறுவனத்திடம் விசாரித்தால், படத்தில் அகிலா கிஷோர் அரை மணி நேரம்தான் வருவாங்க.

நல்ல மாதிரி ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஆனால், இப்போ ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்காங்க என்றார்..!

பட்ட பின் வந்த ஞானம்..!