விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த அரச வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.