கவலைப்படவேண்டாம், விரைவாக வருவேன்: கருணா

நான் கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் போகவில்லை. ஒப்படைக்கப்பட்ட ஒரு இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள். விரைவாக வருவேன், கவலைப்படவேண்டாம், உண்மையே வெல்லும்” என கைதுசெய்யபட்டுள்ள கருணா தெரிவித்துள்ளார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா  என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். அதனையடுத்து, கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது