தனுஷ் யார் மகன்..? என வெளியான முக்கிய ஆதாரம்

தனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்களின் மூத்த மகனான கலையரசன் 16 வயதில் காணாமல் போனதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு மட்டும் அல்லாமல் மரபணு பரிசோதனைக்கும் தாங்கள் தயார் என்று கூறியுள்ளனர் கதிரேசன், மீனாட்சி தம்பதி.

பொய் வழக்குகளால் நீதித் துறையின் பொன்னான நேரம் வீணாவதை நினைத்து கவலையாக உள்ளதாக இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். கதிரேசன், மீனாட்சி கூறுவதில் உண்மை இல்லை என்பதை அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனுஷ் 16 வயதில் காணாமல் போனதாக கதிரேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் சிறுவனாக கஸ்தூரி ராஜா குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகனே என தெரிவித்து வருகிறார்கள்.thanus-1