நாடளாவியரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை (30) காலை 8 மணி முதல் 24 மணிநேரத்திற்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.