நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாட்களும் ஏற்படும் சுகம், துக்கம் தான் நம்மை பலப்படுத்துகின்றது.
நம் பெற்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கை போன்று இன்று கிடையாது, அன்றோ ஆண்கள் பணியையும், பெண்கள் வீட்டையும் கவனித்து வந்தனர்.
ஆனால் இன்றோ இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், இதனால் பல டென்ஷன்கள், வீட்டுக்கு வந்தாலும் கணவன் நம்மிடம் பாசமாகத் தான் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
இதை கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ,
நல்ல கணவரின் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்?
- அன்பான கணவராக இருந்தால், தன்னுடைய மனைவி ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது, அதற்கு மதிப்பளித்து அதை வரவேற்பார்கள். அப்படி இல்லையெனில் அவர் பல்லைக் கடித்து கொண்டு மனைவி செய்த அந்த விஷயத்தை பொறுத்து கொண்டவராக இருப்பார்கள்.
- தன்னுடைய மனைவி ஒரு விஷயத்தில், வெற்றி அடையும் போது அதை பாராட்ட வேண்டும். பொறாமையால் வெளிப்படும் கோபம் மற்றும் ஈகோவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க கூடாது.
- மனைவி முன்னேறும் போது அதை பார்த்து கணவன் அவர்களிடம் நேர்மையாக நடந்துக் கொள்வதுடன், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். மனைவியின் முன்னேற்றத்தை கெடுக்கும் கொடுமையானவராக இருக்க கூடாது.
- கணவன் தன்னுடைய மனைவிக்கு எப்போதுமே ஒரு பாதுகாவலனாக இருக்க வேண்டும். இதனால் தன் பொருள் என்று நினைத்து தான் சொல்வதை மட்டும் கேட்கும் மனைவி கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க கூடாது.
- தன் மனைவியின் மீது ஒரு நல்ல மற்றும் அன்பு மிக்க கணவராக இருந்தால், தன் மனைவி செய்யும் தப்பு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும், நன்மை செய்தால் தட்டிக் கொடுக்க வேண்டும்.
- வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், குழந்தைகளை கவனித்தல், சமையலில் உதவி செய்ய வேண்டும்.