வெள்ளிக்கிழமை நகம் வெட்டக் கூடாது? சனிக்கிழமையில் புதிதாக எதுவும் வாங்கக் கூடாது?

பொதுவாக நம் வீட்டில் தாத்தா, பாட்டி நிறைய கதைகள் மற்றும் வியக்க வைக்கும் சில விசித்திரமான பழக்க வழக்கங்களை சொல்வார்கள்.

உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று நகம் வெட்டக் கூடாது, சனிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் புதிதாக வாங்கக் கூடாது என்று கூறுவார்கள்.

 

வெள்ளிக்கிழமை நகம் வெட்டக் கூடாது ஏன்?

வெள்ளிக்கிழமை ஒரு புனிதமான மற்றும் கடவுளின் பக்திகள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது.

எனவே புனிதமான வெள்ளிக்கிழமை நாளன்று நம்முடைய வீட்டுற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டுவது மிகவும் கெட்ட சகுணமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக தான் நம்முடைய முன்னோர்கள் மற்றும் சத்குரு ஆகியோர்கள் வெள்ளிக் கிழமை அன்று நகத்தை வெட்டக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

சனிக் கிழமை அன்று புதிதாக எதுவும் வாங்கக் கூடாது ஏன்?

இன்றைய காலத்தில் மாயமந்திரங்கள், பில்லி, சூனியம் போன்ற வேலைபாடுகள் அதிகமாக நடந்து வருகின்றது.

எனவே நம் வீட்டில் உள்ளவர்கள் சனிக் கிழமை அன்று புதிதாக எதுவும் வாங்கக் கூடாது என்றும் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்றும் கூறுவார்கள்.

மேலும் நாம் அடுத்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, அங்கு தலை சீவக் கூடாது என்று சொல்வார்கள்.

ஏனெனில் நம்முடைய நகம் மற்றும் முடிகளை எடுத்து பில்லி, சூனியம் போன்ற வேலைபாடுகளை செய்து விடுவார்கள், இதனால் நமது வாழ்வில் பல தடங்கல் ஏற்படுமாம்.