மஹிந்தவுக்கு மேலும் 200 இலட்சம் வழங்கும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செலவினத்திற்காக மேலும் 200 இலட்சம் ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இல்லத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக மேலும் 200 இலட்சம் ரூபாய் பணம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கிட்டத்தட்ட 200 இலட்சம் ரூபா குறை நிரப்பு மதிப்பீடு சபை தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கட்டடம் நிர்மாணிப்பதற்காக தங்குமிட மானியம் என கணக்கின் கீழ் 2016ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 24ஆம் திகதி இந்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் விருப்பத்திற்கு அமைய குறித்த வீடு பழுது பார்ப்பதற்கு, ரணில் – மைத்திரி அரசாங்கம் இதற்கு முன்னர் 300 இலட்சம் ரூபாவை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.