சிறப்புப் பாதுகாப்புடன் தனி அறையில் அடைக்கப்பட்டார் கருணா!

சிறீலங்காவின் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளீதரன் சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்புடன் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டின் பேரிலேயேஇ கருணாவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கமளிக்க நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றவேளை அங்கு வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கருணா நேற்றைய தினம் கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கருணா எனப்படும் முரளீதரன் எம்-2 கட்டடத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.