அமெரிக்காவின் பசுபிக் வலய தளபதி அட்மிரல் ஹரி பி ஹாரிஸின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஹரிஸ் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட தலைவர்களையும் இராணுவ தளபதிகளையும் சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த 27ம் திகதி இலங்கை வந்த அவர் நேற்று 29 வரை இலங்கையில் தங்கியிருந்தார்.
இதன்போது அவர் கொழும்பில் இடம்பெற்ற கடல்வலய பாதுகாப்பு தொடர்பான காலிகலந்துரையாடலிலும் பங்கேற்றார்.
சமுத்திரங்களில் முன்னர் பல்வேறு தடங்கல்கள் இருந்த போதும் தற்போது கடல்வலயபோக்குவரத்துக்கள் நாடுகளை ஒன்றிணைத்துள்ளன என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் பசுபிக் நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை வலியுறுத்திய அவர் இலங்கையைபொறுத்தவரை, இந்த விடயத்தில் இலங்கை பிரதான பங்கேற்பாளராக உள்ளது என்றுதெரிவித்தார்.
இலங்கையை பொறுத்தவரை தற்போது ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படைகளில் இணைந்துலெபனான், மாலி, மத்திய ஆபிரிக்கா, தென்சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றுவதை அவர்சுட்டிக்காட்டினார்.
தமது விஜயத்தின்போது ஹரிஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளுடனும் தனித்தனியே சந்திப்புக்களை நடத்தினார்.
இதேவேளை திருகோணமலைக்கு சென்ற அவர், அமெரிக்கப் படையினர் இலங்கை படையினருக்கு கடல் கண்ணி அகற்றல், அனர்த்த உதவி போன்றவை தொடர்பில் வழங்கிவரும் பயிற்சிகளை பார்வையிட்டார்.
இந்தநிலையில் பல வருடங்களாக இடம்பெற்ற போரின் பின்னர், இலங்கையில் நல்லிணக்கம்மற்றும் வெளிப்படைத் தன்மை முயற்சிகள் தொடரும் நிலையில் இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அட்மிரல் ஹாரிஸ் திருகோணமலையில் வைத்து கருத்துரைத்துள்ளார்.