அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனைகள் அமைச்சரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைக்கப்பட்ட போதே அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதன் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் முன்வைக்கப்பட்டிருந்தது.