இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலு ஒருசில காட்சிகளின் மறு படப்பிடிப்பு இன்று சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இன்றுடன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததை அடுத்து விஜய் வீட்டுக்கு செல்ல கிளம்பினார்.
ஆனால் அதே எம்.ஜி.ஆர்.பிலிம் சிட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதை அறிந்ததும் உடனே அந்த செட்டிற்கு விஜய் சென்றார்.
ரஜினி-விஜய் சந்திப்பு சில நிமிடங்கள் நடந்ததாகவும், இருவரும் ஒரு முக்கிய விஷயம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த முக்கிய விஷயம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட்டினர் குழம்பி வருகின்றனர்.