117வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான பாட்டி

உலகின் மிக வயதான பாட்டி எம்மா, 117வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் எம்மா, 1899ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி பிறந்தார்.

உலகின் மிக வயதான பாட்டியாக கருதப்படும் எம்மா, நேற்று உற்றார், உறவினர்கள் சூழ கேக் வெட்டி தன்னுடைய 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது.

எனக்கு 26 வயதாக இருக்கும் ஒருவர் மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.

எங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது, அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.

பின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன்.

பல ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வருகிறேன், பலரும் வந்து என்னை பார்த்து செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

ஒருநாளைக்கு எம்மா இரண்டு முட்டைகளையும், சில பிஸ்கட்டுகளையும் சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.