இன்று எனக்கு சாவு வந்தால், சந்தோஷமாக சாவேன்! விமான விபத்துக்கு முன் நடந்தது இதுதான்!

பொலிவியாவில் இருந்து கொலம்பியா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியாகினர்.

இவர்களில் சபிகோயன்ஸ் கால்பந்து அணியினரும் அடங்குவர், முதன் முறையாக சுல் அமெரிக்கானா தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இதை உற்சாகமாக வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் கொண்டாடினர், விமான விபத்து நடந்தவுடன் இந்த வீடியோ வைரலாக பரவியது.

மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த சபிகோ நகரம் முழுவதும் ஒப்பாரி சத்தம்.

இதுகுறித்து அணியின் தலைவர் டேவிட் பில்கோ விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், வேறொரு பணி காரணமாக என்னால் என் அணியினர் உடன் பயணிக்க முடியவில்லை.

அவர்களை நான் வழியனுப்பிய போது இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கனவை நனவாக்க போவதாக உறுதியளித்தனர்.

இது கிளப் அல்ல, குடும்பம், வெற்றி, தோல்வி என எல்லா நேரத்திலும் சிரித்திருந்தோம்.

இன்று உயிர் பிழைத்த வீரர்களுக்கு, இதை மறக்க நெடுநாள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய உற்சாகத்தில் பயிற்சியாளர் வெளியிட்ட டுவிட்டில், இன்று எனக்கு சாவு வந்தால், சந்தோஷமாக சாவேன் என தெரிவித்திருந்தார்.

சந்தோஷத்தில் தெரிவித்திருந்தாலும், இது நடந்திருக்ககூடாது!!!