இந்தியாவில் தகாத உறவின் காரணமாக தங்கையை விஷ ஊசி போட்டு கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்பாடி அருகே லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மகள் அமுதா பிளஸ்-2 முடித்துவிட்டு டெய்லரிங் படித்து வருகிறார்.
ஆந்திர குப்பம் பகுதியை சேர்ந்த முனுசாமியின் மகன் சபரி, கூலி வேலை செய்து வரும் சபரி அடிக்கடி லெட்சுமிபுரம் வந்துள்ளார்.
சபரிக்கு அமுதா தங்கை உறவுமுறையாகும், இதை மறந்து இருவரும் காதலிக்க தொடங்கினர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு லெட்சுமிபுரம் வந்த சபரி, அமுதாவின் வீட்டில் தங்கியுள்ளார்.
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர், சபரியின் நடவடிக்கைகளில் அமுதாவின் பெற்றோருக்கு சந்தேகம் வந்துள்ளது.
தன்னுடைய நடவடிக்கைகள் வெளியே தெரியவந்தால் அவமானம் என கருதிய சபரி, அமுதா அடித்து உதைத்துள்ளார்.
விஷ ஊசி போட்டு சித்ரவதை செய்ததுடன், துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இதனை தற்கொலை என நம்பவைக்க, தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளார்.
வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அமுதாவின் பெற்றோர் மகளை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
உடனே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சபரி மீது சந்தேகம் எழவே, பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டார்.