இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங். 2011 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
யுவராஜ்சிங்- ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் இன்று நடக்கிறது. இந்த திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்களும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மொகாலி டெஸ்டில் வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.
மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
திருமணத்துக்கு முந்தைய தினமான நேற்று மணப்பெண்ணுக்கு மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதோடு நட்சத்திர ஓட்டலில் மது விருந்தும் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்றன.
இதேபோல முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஆசிஷ் நெக்ரா, முகமது கயூப் ஆகியோரும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.