பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டுக்களை விடுவிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 6 கடவுச்சீட்டுகளும், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர்களின் கடவுச்சீட்டுக்களும் இவ்வாறு நீதிமன்றங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களும்மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.