மாவீரர் நாள் கொண்டாட்டத்தில் சிறிதரனின் தோற்றத்தையும், வெளிப்பாட்டையும் பார்த்தீா்களா?? பிரபாகரன் மாவீரர் தினவிழாவில் கைகட்டி நிற்கும் அதே தோரணை, அதே பார்வையில் காட்சி தரும் சிவஞானம் சிறிதரன்.
எங்களுக்கு புதிய தலைவர் வந்துவிட்டார்…..!!! தலைவர் வந்துவிட்டார்!!. தமிழீழம் வெகுவிரைவில் மலரப்போகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், மாவீர்நாள் கொண்டாட்டம் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் ஆட்களை வைத்திருக்கிறது.
சிவாஜிலிங்கம், சிறிதரன் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி நிரலுக்குரியவர்கள். அரசியலில் எப்போதும் பல வழிகளும் வகைமைகளும் இருக்கும். தீவிரச் சக்திகளும் மென்சக்திகளும் இடைநிலைச் சக்திகளும் இருப்பர்.
ஆளும் தரப்பும் சரி, எதிர்த்தரப்பும் சரி இவற்றையெல்லாம் தமக்குரிய வகையில் சாதகமாகவே கையாள முயற்சிக்கும். மென்னிலையாளரான சம்மந்தனையும் சுமந்திரனையும் கையாள்வதைப்போல தீவிர நிலையாளர்களாக சிவாஜிலிங்கம், சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரையும் அரசாங்கம் கையாண்டே வருகிறது.
மாவீரர் நாள் கொண்டாட்டத்தில் சிறிதரனின் தோற்றமும் வெளிப்பாடும் இவ்வாறானதே. அரசாங்கமும் சம்மந்தன் அணியும் சேர்ந்து உருவாக்கிய இடைவெளியில் எழுந்த பிம்பமே அவருடைய மாவீரர்நாள் சுடரேற்றும் காட்சி.
ஆகவே இது அரசாங்கத்தின் மிகத்திட்டமிடப்பட்ட, நேர்த்திமிக்க செயற்பாட்டின் தொடர் விளைவின் வெளிப்பாடே. இதற்குத் தோதான ஆட்களை அது தேர்ந்தெடுக்கிறது. படை மற்றும் அரச தரப்பின் இரகசிய வழிகளில் வழிநடத்தப்படுகிறார் சிறிதரன் என்பது பொதுவெளியின் வலுவான நம்பிக்கை என்பதையும் இங்கே கவனிப்பது பொருத்தம்.
இன்னாள் தமிழீழ தேசிய தலைவர் (எல்லாம் பிளான் பண்ணி எடுத்த படம்.)
முன்னாள் தேசிய தலைவர்
இன்னாள் தமிழ் தேசிய தலைவர்
(சிறிதரன் மாவீரர் உரை நிகழ்த்துவது ஒன்றுதான். பாக்கி.. இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள் சிவஞானம் சிறிதரனும் மாவீரர் உரை நிகழ்த்தும் காட்சிதனை காண்பீர்கள்!)
சிறீதரனின் போராட்டப்பின்னணி.!!. (இணய தளங்களில் அலசி ஆராய்ந்ததில் கிடைக்கப்பெற்றது.)
அதிக எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களை கொண்ட சிறீதரனின் குடும்பத்தில் யாரும் போராளியாக இருந்ததில்லை.
சிறீதரன் 1989ல் ஒருவருடம் இயக்கத்தில் இருந்துவிட்டு சண்டைக்கு பயந்து ஆயுதத்தை மரத்தில் கொழுவிட்டு தப்பியோடி பின்பு விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டு மன்னாரில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகுகின்றவர்களுக்கு தண்டனை வழங்கும் பண்ணையில் ஒரு வருட தண்டனை கொடுக்கப்பட்டது.
அதாவது தோட்டத்துக்கு புல்லுச்செருக்கி தண்ணி ஊத்தி விட்டு வீட்டுக்கு வந்தவர்.
சிறீதரன் தீபனின் தங்கை ஞானாவை மணம் முடித்தார்.
சிறீதரன் செய்த போராட்டப்பங்களிப்பு என்னவெனில் தீபனின் தம்பி கில்மனின் வாலைப்பிடித்து தீபன் வீடு சென்று ஞானாவை காதலித்ததும் அவரை திருமணம் செய்ததும், தேர்தல் காலத்தில் தீபன் பெரும் தளபதியின் தியாகத்தை தன் அற்பபதவி நலனுக்காக கூவி விற்றதும்தான்.
தீபனோடு தீபன் சாகும்வரை முரண்பட்டவராகவே சிறீதரன் காணப்பட்டார். தீபனும் சிறீதரனும் கதைப்பதில்லை என்பதே உண்மை.
அன்றைய காலத்தில் தீபன் தொடர்பாக அவதூறாக பிரபாகரனுக்கு கடிதம் எழுதி அப்பழுக்கற்ற ஒரு தளபதியை களங்கப்படுத்தியிருந்தார்.
சிறீதரன் இரண்டு முறை க.பொ.த.சாதரண பரீட்சைக்கு தோற்றினார். அவர் வைத்திருக்கும் அனைத்து பட்டங்களும் வெளிவாரியாக பெற்றுக்கொண்டவை.சிறீதரன் மேடையில் பேசும்போது தான் உள்வாரியாக பல்கலைகழகத்தில் கற்றதுபோலவே பேசுவார் உண்மை அதுவல்ல.
கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அலுவலகம்
கிளிநொச்சியில் 2011ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு அலுவலகம் இயங்க ஆரம்பிக்கின்றது. அலுவலகம் திறக்கப்பட்ட காலத்தில் அச்சம் காரணமாக பலர் வருவதே இல்லை.
சிறீதரனின் உறவினர்களும் வருவதில்லை. முற்றிலும் இராணுவ மயமாக அந்த சூழல் இருந்தது.
இத்தகைய மகிந்த அரசாங்கத்தின் படைத்தரப்பின் கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்த காலத்தில் கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பை கட்டி எழுப்புவதில் பொன்.காந்தன் உள்ளிட்ட சிலரின் பங்கே இருந்தது.
2011ம் ஆண்டு வேழமாலிகிதனுக்கும் சிறிதரனுக்கும் முறுகல்நிலை ஏற்பட்டு சிறீதரனை துரோகி என்று கூறவிட்டு வேழன் என்பவர் விலகியிருந்தார். பின் பொன்.காந்தனும் சத்தியானந்தனும் வேழனை சிறீதரனுடன் சேர்த்துவிட்டதாக நம்பகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்: 2010ம் ஆண்டு சிறீதரன் கொழும்பில் இருந்து வந்த போது அவருடைய வாகனத்திற்கு துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் சிறீதரனுக்கு அதில் ஒரு கீற கூட விழவில்லை.
விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்துக்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளின் மலைகளை சாய்த்த ஆழ ஊடுருவும் படையணிக்கு சிறீதரனை சாய்ப்பது பெரிய விடயமே அல்ல.
சிறீதரன் மயிரிழையில் தப்பியதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த மிகவும் திட்டமிட்ட செய்யப்பட்ட தாக்குதல்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சிறீதரன் இன்றுவரை அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை என்பதை நீங்கள் காணலாம்.
மகிந்த அரசாங்கத்துக்கு சம்மந்தன் மாவை சேனாதிராசா அலைகளை அடக்கி தங்கள் சார்பான ஆனால் தமிழ்தேசியத்தை பேசக்கூடிய ஒருவரை உருவாக்கி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பது சிதைப்பது நோக்கமாக இருந்தது.
இந்த நகர்த்தில் வெற்றிகரமான நடவடிக்கையில் ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பியசேனா பிரிந்து சென்றது.
ஆனாலும் சிறீதரன் மீதான துப்பாக்கி சூட்டு நடவடிக்கை எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.
பாதை திறப்பின்போது யாழ்ப்பாணம் நுழைந்த விடுதலைப் புலிகளை மக்கள் வெள்ளம் திரண்டுவந்து தூக்கி மாலை போட்டு அழைத்துச்சென்றதுபோல தனக்கு இந்த சூட்டுச்சம்பவத்தின் பின் ஒரு வரவேற்பை கிளிநொச்சியில் எதிர்பார்த்தார்.
அவர் ஆசை கருதி கிளிநொச்சியில் மிகச்சிறிய அளவில் மாலைபோட்டு அவரின் உறவினர்கள் வரவேற்றனர். இந்த விடயத்திலும் பொன்.காந்தன் அக்கறை காட்டாது இருந்ததை சிறீதரனுக்கு அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறீதரன் 2010ம் ஆண்டு தேர்தல் கேட்பதற்காக வவுனியாவில் சத்தியானந்தன் வீட்டில் சந்திப்புகளை நடத்தியபோது பொன்.காந்தன் உள்ளிட்டவர்களிடம் தான் ஒரு தடவைதான் இந்த பதவியில் இருப்பேன் என சத்தியம் செய்து தனக்கு ஒத்துழைக்கும்படி கெஞ்சிக்கேட்டிருந்தார்.
அதன் காரணமாகவே ஆதரவு வழங்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகிய பின் அடுத்த பதவிக்காலத்தை பெற்றுக்கொள்வதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் ஒரு முக்கிய பதவியை பிடிப்பதும் அவரது இலக்கா செயற்பட ஆரம்பித்தார்.
அதற்காக தன் சகோதரன் சிறீகுகனின் ஊடகமான லங்காசிறீ தமிழ்வின் மனிதன் ஜேவிபி நியூஸ் ஜே.வி.வி நியூஸ் ஊடங்களில் கிளிநொச்சியில் தன்னை விட உயர்வாக இருக்கக்கூடிய அரசியலுக்கு வந்தால் தன்னை வீழ்த்துவார்கள் என கருத்தக்கூடிய முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபரும் வடக்கு மகாண பிரதி செயலாளருமாக இருந்த இராசநாயகம் முள்ளிவாய்க்கால்வரை சிறந்த மருத்துவ தொண்டாற்றிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மகா வித்தியாலய முன்னாள் அதிபர் பங்கயற்செல்வன் உள்ளிட்ட பலரை துரோகியாக்க கடும்முயற்சி எடுத்திருந்தார்.
இந்த விடயங்களில் வேழமாலிகிதன் முன்னின்றார்.
(பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதன்)
திரு.இராசநாயகம் அவர்களை துரோகி ஆக்க வேழமாலிகிதன் அருணாசலம் (தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளார்) சிறீதரனுடன் சேர்ந்து கடும் முயற்சி மேற்கொண்டிருந்தார் காரணம் விடுதலைப்புலிகள் காலத்தில் கிராமசேவகராக இருந்த வேழமாலிகிதனுக்கு க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தி இல்லை என்பதை கண்டுபிடித்த இராசநாயகம் வேழமாலிகிதனை கிராம சேவகர் பதவியில் இருந்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த வேழன் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளருடன் வால்பிடித்துக்கொண்டு புலிகளை இராசநாயகத்துக்கு எதிராக திசை திருப்ப முயன்றபோதும் அது வெற்றியளிக்கவில்லை.
வைத்தியர் கலாநிதி சத்தியமூர்த்தி தொடர்பாக சிறீதரன் தன் சகாக்களிடம் அவதூறுகளை பரப்ப முயன்று வந்துள்ளார்.
அவர் மகிந்த அரசாங்கத்திடம் விலைபோனவர் என்றும் விடுதலைப்புலிகள் காலத்தில் கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி வைத்தியத்திற்காக அந்த வைத்திய கலாநிதியிடம் சென்றபோது தன் மனைவியை பாலியல் நோக்கத்தோடு சத்தியமூர்த்தி தொட்டதாக தன் சுயநலனுக்காக தன் மனைவியை கூட விற்பதற்கு சிறீதரன் தயாராக இருந்தார்.
வேழமாலிகிதன் உருத்திரபுரத்தில் நான்கு பிள்ளைகளின் தாயாரை மணம்முடித்துள்ளார். அவரின் கணவர் பெயர் சதீஸ் இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வு பிரிவில் முகவராக இருந்துள்ளார்.
2000ம் ஆண்டு இவர் முகவர் பணியில் விட்ட தவறுகாரணமாக விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு இறந்த நிலையில் மனைவியிடம் ஓப்படைக்கப்பட்டார்.
அதன் பிறகு அப்பெண் மேலும் இரு திருமணங்கள் முடித்து கணவர்களால் கைவிடப்பட்ட நிலையில் நான்காவது கணவராக வேழமாலிகிதன் அப்பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.
அந்த வகையில் வேழன் பெரிய தியாகம் செய்துள்ளார் என்ற சொல்லலாம்.
ஆயினும் வேழன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்பது கிளிநொச்சி மக்கள் அறிந்துள்ளவிடயம். பொன்.காந்தன் முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்று பன்னிரண்டு ஆண்டுகளின் பின் கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் போரினால் தன் கணவனை முள்ளிவாய்க்காலில் இழந்த மூன்று விதவைகளை கொண்ட குடும்பத்தில் ஒரு விதவையை திருமணம் முடித்து தன் வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
சிறீதரன் இரண்டாம் தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது பொன்.காந்தனின் பங்கு உலகறிந்தது.
அவர் தன் சக்திக்கு அப்பால் மகிந்த ராஜபக்சவோடு இணைந்து இருந்தவர்களையும் கூட்டமைப்புக்கு எதிரானவர்களை மேடைகளில் மிகவும் ஆக்ரோசமாகவும் சில இடங்களில் இழிகர சொற்களை பாவித்தும் இருந்தார்.
ஆனால் அது தான் கிளிநொச்சியில் கூட்டமைப்பின் வெற்றிக்கு பலமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் எல்லா மேடைகளிலும் பேசிய பொன்.காந்தனை யாழ்ப்பாணத்தில் எந்த பிரச்சார கூட்டங்களிலும் ஏற்ற சிறீதரன் தயாராக இருக்கவில்லை.
குறிப்பாக பொன்.காந்தன் பிறந்த ஊரான கரவெட்டியில் பொன்.காந்தனின் உரையை மக்கள் எதிர்பார்த்த போதும் சிறீதரன் பொன்.காந்தனை அழைத்துச்செல்லவில்லை.
அதற்கு சிறீதரனால் சொல்லப்பட்ட காரணம் பொன்.காந்தன் கீழ்ச்சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் முடித்துள்ளார் கரவெட்டியில் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதாகும்.
பொன்.காந்தன் புகழ்பூத்த கரவெட்டியில் பிறந்தவர். கிளிநொச்சியில் 39 வருடமாக வாழ்கின்றவர். மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் சிவசிதம்பரத்தின் உறவினரும் கூட.
ஒரு உயர் வெள்ளாள சமுகத்தில் பிறந்தவர் பொன்.காந்தன். ஆனால் விடுதலைப் புலிகள் காலத்தில் அவர் கண்ட அனுபவங்கள் கோட்பாடுகள் பொன்.காந்தனை சாதியங்கடந்த ஒருவராக வாழவைத்துள்ளது.
சிறீதரனின் சாதிய பிரிவினை
சிறீதரன் கிளிநொச்சியை சாதி வர்க்கவேறுபாடுகளுடன் தொண்டர்களை வகைப்படுத்தி கூறுபோட்டுள்ளார். உதாரணமாக பளையைசேர்ந்த சுரேன் என்பவரை அப்பிரதேசத்தில் பயன்படுத்துகின்றார்.
அதற்கு சிறீதரன் சொன்ன காரணம் சுரேன் சீவல் சமுகத்தை சேர்ந்தவன். அவங்களை பகைத்தால் அந்த வாக்குகள் எனக்கு விழாது என்பதுதான்.
இதுபோலவே சேதுபதி பிரபாமணி லூக்கா ஜெயக்குமார் என்பவர்களை மலையக சமுக வாக்குகளை வாங்குவதற்காக பலிக்கடா ஆக்கியுள்ளார்.
இந்த நிலை மற்றும் சிறிதரனுக்கு இருக்கும் உளவியல் ரீதியான தாழ்வு மனப்பான்மை என்பன கிளிநொச்சியில் பலரை துரோகிகளா தோற்றுவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி கிளிநொச்சி மகா வித்தியாலயம் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயம் கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயம் என்பன சிறீதரனின் பின்னணி மூலம் சமுகத்தில் குழப்பமடைந்த பாடசாலைகளாக மாற்றமடைந்தன.
இதன் மூலம் கிளிநொச்சி கல்வி சமுகம் மிகவும் அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ளது.
2011 உள்ளுராட்சி சபை தேர்தலும் சிறீதரனும் முட்டாள் தனமும்
2011ம் ஆண்டு உள்ளுராட்சி சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறீதரன் தனது உறவினரான நாவை.குகராசா(மணியம்) என்பரை தவிசாளராக நிறுத்த முனைந்தபோது இதற்கு மணியத்தை பற்றி ஒரு மொட்டை கடிதத்தை எழுதி மலையாளபுரத்தில் இருந்து ஒருவர் எழுதுவதுபோல எழுதி வேழமாலிகிதன் அனுப்புகின்றார் சிறீதரனுக்கு.
காரணம் வேழனுக்கு தவிசாளராக போட்டியிட ஆசையிருந்திருக்க வேண்டும். இதில் சத்தியானந்தனும் மிகப்பெரிய வாக்குவாதத்தில் சிறீதரனோடு மணியத்தை தவிசாளராக போடக்கூடாது என்பதில் ஈடுபட்டார்.
ஆனால் இவர்கள் எவரின் கதையையும் சிறிதரன் கேட்கவில்லை. மணியம் நிறுத்தப்பட்டார்.அன்றைய சூழ்நிலையில் அச்சம் காரணமாக போட்டியிட முன்வரா நிலையில் பலரை கெஞ்சிக்கேட்டே நியமனப்பத்திரத்தை நிரப்பவேண்டியிருந்தது.
இதில் பொன்னம்பலநாதனை சிறீதரன் சிபார்சு செய்கின்றார்.
பொன்னம்பலநாதன் சிறீதரனின் மாமா. கொழும்பு போய்கொண்டிருந்த நகுலன் என்பவனை பொன்.காந்தன் தொலைபேசி மூலம் மிகவும் வினயமாக அழைத்து போட்டியிட வைத்தார்.
நகுலன் பின் இரண்டாவது அதிகூடிய வாக்குடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளரானார்.ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் நகுலன் ஊழல் லஞ்சம் வாங்கும் பேர்வழியாக கிளிநொச்சியில் அறியப்படுகின்றார்.
சிறீதரனின் அனுபவக்குறைபாட்டால் இழக்கப்பட்ட பிரதேசசபைகளும் காப்பாற்றிய ஆனந்தசங்கரியும்
2011ம் ஆண்டு கிளிநொச்சி உள்ள கரைச்சி பிரதேச சபை பூநகரி பிரதேசசபை பளை பிரதேசசபை இவைகளுக்கு ஆட்கள் தேடும் பணியில் ஈடுபட்டு பளை பிரதேச சபைக்கு ஆட்கள் பளையில் கிடைக்காத நிலையில் கிளிநொச்சியில் இருந்தே ஆட்களை போட்டியிட நியமிக்க வேண்டிய சூழல் இருந்தது.
பளைப்பிரதேச சபையில் வேட்பு மனுவில் வேழமாலிகிதன் ஜோன் வசந்தன் சச்சிதானந்தசிவம் போன்றோர்களின் பெயரை சிறீதரன் போட்டு நிரப்பினார்.
இதுபோலவே பூநகரிக்கும் தனக்கு தெரிந்தவர்களை போட்டு நிரப்பிக்கொண்டிருந்தார்.
இந்த இரண்டு பிரதேச சபைகளின் வேட்பு மனுக்களையும் சிறீதரன் தன் நேரடிப்பார்வையிலே ரஜனி ஒரு பெண்ணை வைத்து செய்து கொண்டிருந்தார்.
கரைச்சி பிரதேச சபையின் வேட்பு மனுவை பொன்.காந்தன் மிகவும் ஆறுதலாக செய்து கொண்டிருந்தார்.பொன்.காந்தனை வேகமாக செய்யும் சிறீதரன் கடிந்துகொண்டும் இருந்தார்.
இந்த நேரத்தில் கொழும்பில் இருந்து சட்டத்தரணியும் பா.உறுப்பினருமான சுமந்திரன் கிளிநொச்சி பணிமனைக்கு வந்திருந்தார்.
வேட்பு மனுக்கள் தயாரென உறுதிப்படுத்திய சிறீதரன் பளை பூநகரி ஆகிய வேட்பு மனுக்களை எடுத்துக்கொண்டு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு கிளிநொச்சி கச்சேரிக்கு புறப்படும் போது பொன்.காந்தனை அழைத்து நீர் என்ன செய்யிறீர் உம்மாலதான் கரைச்சி பிரதேச சபையின் வேட்பு மனுக்களை கொண்டு செல்ல முடியாமல் இருக்கு என திட்டிவிட்டு வாகனத்தில் சென்றுவிட்டார்.
இவற்றை கேட்டுக்கொண்டிருந்து பொன்.காந்தன் பிரதேசசபை வேட்பு மனுக்களை நிதானமாக செய்து முடித்திருந்தார்.
கிளிநொச்சி கச்சேரியில் வேட்பு மனுக்களை கொடுத்த சிறீதரன் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த சில மணித்தியாலங்களில் பளை பிரதேசசபை பூநகரி பிரதேசசபை ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவத்தாட்சியால் நிராகரிக்கப்பட்ட செய்தி வந்தது.
காரணம் அந்த வேட்பு மனுக்களை ஒரு சமாதான நீதிவான உறுதிப்படுத்தாமல் சிறீதரன் கொண்டு ஒப்படைத்த மாபெரும் தவறை சிறீதரன் இழைத்திருந்தார்.
தடுமாறிப்போய் குழம்பிப்போய் சிறீதரன் திகைத்து நின்றார். ஊடகங்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்த செய்தி அறிந்து சிறீதரன் மீது பாயத்தொட்ங்கினர்.
சிறீதரனின் அலுவலகம் குழம்பிப்போயிருந்தது. இந்தவேளையில் சிறிதரனை காப்பாற்றும் நோக்கில் சிறீதரனின் குடும்ப ஊடகமான தமிழ்வின் ஜே.வி.பி நியூஸ் என்பன இந்த வேட்பு மனுக்களை சுமந்திரனே திட்டமிட்டு நிராகரிக்கப்படக்கூடிய வேட்பு மனுவாக கொண்டு சென்று ஒப்படைத்தார் என செய்திகளை புனைய முனைந்திருந்தது.
ஆனால் உண்மை என்னவெனில் சிறிதரனால் அறிவற்ற தனத்துடன் சட்டநுணுக்கம் தெரியாமல் பூர்த்திசெய்யப்பட்ட பளை மற்றும் பூநகரி பிரதேசபைகளின் வேட்பு மனுக்களை சுமந்திரன் கூடச்சென்று கொடுத்தார் என்பதே.
காப்பாற்றிய சங்கரி
சிறீதரனால் தேர்தலின் முன்னதாகவே வீட்டுச்சின்னத்திடமிருந்து இழக்கப்பட்ட பிரதேசபையை ஈ.பி.டி.பி கட்சியே கைப்பற்றும் வாய்ப்பு இருந்த நிலையில் சுதாகரித்துக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவராக இருந்த சம்மந்தனும் செயலாளராக இருந்த மாவை.சேனாதிராசாவும் சங்கரியுடன் தொடர்புகொண்டு கிளிநொச்சியில் பளை பூநகரி ஆகிய பிரதேச சபைகளை மீட்டெடுக்க தமிழர் விடுதலை கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் வேட்பாளர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்டதற்கு சங்கரி இணக்கம் தெரிவித்து கிளிநொச்சியில் கடந்த சிறீதரன் தமிழ்த்தேசியப்பேச காரணமாக இருந்தார் என்பதே உண்மை.
கரைச்சி பிரதேசத்தின் வேட்பு மனுக்கள் பத்திரமாய் நிராகரிக்கப்படாமல் இருக்கக்காரணமாய் இருந்தவர் என்பதே வரலாறு.
இல்லையெனில் கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய அரசியல் மூழ்கிப்போயிருக்கும்.சிறீதரன் விடுதலைப்புலிகளின் காலத்தில் சங்கரியின் ஊடாக சமாதான நீதவான் பதவியை பெற்றிருந்தார் என்பது இங்கு பலருக்கு தெரியாத இரகசியம்.
சிறீதரன் விடுதலைப்புலிகளின் காலத்தில் சங்கரியுடன் தொடர்பில் இருந்தார் என்பதே உண்மை.வடக்கு மாகாண சபை தேர்தலில் வீட்டுச்சின்னத்தில் கேட்ட சங்கரியை தோற்கடித்து ஈ.பி.டி.பி உறுப்பினரும் சிறீதரனின் மைத்துனருமான தவநாதனை வடக்கு மாகாண சபைக்கு சங்கரி தன் நன்றியை சிறீதரன் தெரிவித்திருந்தார்.
இரணைமடு தண்ணீரும் சிறீதரனும்
இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுபோதவற்கு எதிர்த்தார் என்று அறியப்பட்ட சிறீதரனுக்கும் இரணைமடு தண்ணீருக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது பற்றிப்பார்த்தால் இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுபோக முதல் பத்திரிகையை பதிவு செய்திருந்தவர் ஆனந்தசங்கரி அடுத்து இதை எதிர்த்து கொழும்பு வார இதழ் ஒன்றில் பெருமாள் கணேசன் கட்டுரை எழுதியிருந்தார் அடுத்து உதயன் பத்திரிகையிலும் இது கட்டுரைகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் சிறீதரனை சகாக்கள் சேர் இரணைமடு தண்ணீரை கொண்டுபோவதற்கு எதிராக ஒரு அறிக்கை விடவேண்டுமென கேட்டபோது அதற்கு சிறிதரன் சொன்னார் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் தேர்தல் நெருங்கி வருகின்றது.இதில் கைவைத்தால் யாழ்ப்பாண வாக்குகளை நான் இழக்கவேண்டிவரும் என்றார்.
பின்பு கிளிநொச்சி விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்தவுடன் கிளிநொச்சி வாக்குகள் பறிபோய்விடுமென கருதிய சிறீதரன் இரணைமடு தண்ணீரை கையிலெடுத்து அரசியல் செய்யத்தொடங்கினார்.இதுவே உண்மைகளை பத்திரிகை பதிவுகளை பார்ப்பதன் மூலம் யாவரும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
பிரபாகரனாக தன்னை நினைத்த சிறீதரன்
சிறீதரன் 2012ம் ஆண்டு ஒரு இரவு பொன்.காந்தன் உட்பட சிலரை அழைத்து தனித்தனியே சொன்ன விடயம் எமது வரலாறறில் முக்கியமானது.
சிறீதரன் சொல்கிறார் ‘இந்த விடயத்தை நீங்கள் உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். எனக்கு நம்பகரமான வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் இது.
2009ல் பிரபாகரனை மகிந்த படைகள் உயிரோடு பிடித்து கொழும்பு கொண்டு சென்று அங்கு மகிந்தராஜபக்சவின் காலில் விழவைத்து மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் கன்னத்தில் அறைந்து பின் அடித்து கொல்லப்பட்டார்” என்பதே இதை கேட்டவர்கள் சிறீதரனின் நம்பகரமான வட்டாரம். இது தொடபாக ஆச்சரியத்திலும் அச்சத்திலும் இருந்தனர்.
சிறீதரன் இந்த விடயத்தை தன்னை சுற்றி இருந்தவர்களிடம் தனித்தனியே சொல்லக்காரணம்.
பிரபாகரன் வருவார் பிரபாகரன் இருக்கிறார் என நம்பிக்கையில் இருக்கும் இவர்கள் பிரபாகரன் பற்றிய எதிர்பார்ப்பை கைவிட்டு தன் மீது பிரபாகரனுக்கு நிகரான விம்பத்தை உருவாக்க வேண்டுமென்பது.
சிறீதரன் தன்னை சிங்கள நாளிதழ்கள் பிரபாகரன் என எழுதுதுவதாக தன் சகாக்களிடம் சொல்வார்.இதை கேட்;ட பலர் சிறீதரனை ஒரு கோமாளியாகவே கருதினர்.
இப்பொழுதும் சிறீதரன் பிரபாகரனை விற்றும் மாவீரர்களை விற்றும் பிரபாகரன் ஆக நினைப்பதை பார்க்கலாம்.
கிளிநாச்சி யாழ்ப்பாணத்தில் சிறீதரனால் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல் ஒன்றில் பிரபாகரனின் நீ பெரிது நான் பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழ் என்ற சிந்தனை பொறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த சிந்தனையின் கீழ் பிரபாகரனின் பெயர் குறிப்பிடப்படாமல் சிறீதரனின் பெயர் குறிக்கப்பட்டிருந்தது. அந்த வாழத்து மடலை எமது மக்கள் மீள எடுத்துப்பார்த்தால் வரலாற்றில் சிறீதரன் எத்தகைய வரலாற்று அழிப்பை செய்து எவனுடையதோ தியாகத்தில் தன் பெயரை பொறித்து சந்ததிக்கு கையளிக்கின்றார் என்பதை காணலாம்.
சிறீதரனின் தன் முதல் பதவிக்காலத்தில் கூட்டமைப்புக்குள் வலிமை மிக்க பதவியொன்றை பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் செய்திருந்தார்.
அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது. தனது குடும்ப ஊடகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்வது.
அல்லது அவர்களின் நல்ல பணிகள் தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்வது போன்ற விடயங்களை கையாண்டு வந்திருந்தார்.
சிறீதரனுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பதவியை கைப்பற்றுவதே இலக்காக இருந்தது. ஆனால் அது கைகூடாமல் போகவே.கூட்டமைப்புக்குள் இருந்துவிலகி எப்படி வேறொரு தேசிய தளத்தை தனக்கு உருவாக்குவது பற்றி சிந்தித்தார்.
அதற்காக ஆனந்தசங்கரியை ஏமாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை விலைக்கு வாங்கி அதன் மூலம் தான் ஒரு கட்சித்தலைவர் ஆக முனைந்தார்.
சங்கையா மூலம் மேற்கொண்ட இந்த முயற்சி கைகூடவில்லை.அதற்கு சிறீதரனின் பித்தலாட்டங்களை நன்கு உணர்ந்திருந்த சங்கரி அதற்கு மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை தேர்தல் வந்தது கிளிநொச்சியில் யாரை போடலாமென்று சிந்தித்தபோது பலரால் பொன்.காந்தன் வேழன் போன்றவர்களின் பெயர்களையும் சிபார்சு செய்தார்கள்.இதை உணர்ந்து கொண்ட சிறீதரனுக்கு சொந்த புத்தி வேலை செய்தது.அதற்காக வேலைசெய்தார்.
2013ம்ஆண்டு தை மாதம் 13ம் நாள் கிளிநொச்சி தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு பணிமனை பயங்கரவாத பிரிவால் சுற்றிவளைக்கப்பட்டு வேழன் கைது செய்யப்பட்டார்.வேழனிடம் அவர்கள் விசாரணை செய்ய வேழன் பொன்.காந்தனை காட்டிக்கொடுத்தான். பொன்.காந்தனை அவர்கள் கைது செய்யவர பொன்.காந்தன் தலைமறைவாகியிருந்தார்.
அப்பொழுது பொன்.காந்தனை சந்தித்த சிறீதரன் பொன்.காந்தனை சரணடையும்படி வற்புறுத்தினார்.
ஆனால் பொன்.காந்தன் இந்தியா செல்ல இருந்த நிலையில் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார் சித்திரவதை செய்யப்பட்டார். பொன்.காந்தனும் வேழனும் கைதுசெய்யப்படப்போவது சிறீதரனுக்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது.
பாராளுமன்ற அமர்வுகள் முடிந்த தை 13நாள் கிளிநொச்சிக்கு வரவேண்டிய சிறீதரன் வராமல் மாதிவல விடுதியில் தங்கியிருந்தார்.
இதன் பிறகு சிறீதரன் தன் அலுவலகத்தில் திட்டமிட்ட ஆணுறைகள் வெடிபொருட்களை அன்றைய அரசாங்கம் வைத்ததாக விட்ட அறிக்கைகளையும் வடக்கு மாகாண சபை தேர்தலில் எனது வலது கையும் இடது கையும் வேழனும் காந்தனும் என்று விட்ட நாடகத்தை இவர்களை சிறைக்குள் தள்ளி சிறீதரன் தனது உறவினரான பசுபதிப்பிள்ளையையும் தனக்கு வாத்தியார் வேலை மேலதிகாரிகளான குருகுலராஜா அரியரத்தினம் போன்றவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க தேசியம் பேசி மக்கள் வாக்குகளை சூறையாடியதையும் மக்கள் மீளவும் நினைத்துப்பார்க்கலாம்.
சிறையில் வேழன் ஆடிய கூத்து
சிறையில் அடைக்கப்பட்ட வேழனும் காந்தனும் விசாரணக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். எனக்கு எதுவும் தெரியாது காந்தன் முழுவதும் என்று சொல்லி தப்பிக்கொண்ட வேழன் அங்கிருந்த சிங்கள கைதியொருவர் மூலம் அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு சிங்களத்தில் கடிதம் எழுதினார்.
அதில் கூட்டமைப்பு பற்றியும் சிறீதரன் பற்றியும் தூற்றப்பட்டிருந்த அதே வேளை தான் இன்னும் திருமணம் முடிக்காதவன் என்றும் கேணியா என்ற விதையிறக்க நோயினால் அவதிப்படுபவன் என்றும் ஆகவே தன்னை விடுதலை செய்யும்படி அதில் மன்றாடியிருந்தான்.
இதை பார்த்த அங்கிருந்த பத்துவருடம் பலவருடம் வதைசுமந்துவரும் தமிழ் அரசியல் சிறைக்கைதிகள் அவமானமாக பார்த்தனர்.
சிறைபோய் ஒரு மாதத்துள் இத்தகைய கோமாளித்தனத்தை வேழன் செய்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் வேழனுக்கு கல்யாணம் பட்டப்பெயர் இட்டு அழைக்கத்தொடங்கினர் என தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் எட்டாம் வகுப்பு படித்த முட்டாள் பிரபாகரனால்தான் எனக்கு இந்த நிலையென்று கடுமையாக விமர்சித்தாகவும் அறியமுடிகின்றது.
வடக்கு மகாண சபை தேர்தலில் தான் நினைத்த மூவரையும் கிளிநொச்சியில் நியமித்த சிறீதரன் இன்னும் மேலே போய் தனது அலுவலத்துக்கு வந்து உருக்கமாகவும் நெருக்கமாகவும் இரவு ஏழுமணிவரை உரையாடும் அனந்தி சசிதரன் மீதான மையலுக்கும் நன்றிக்கடன் தீர்க்க மாவைசேனாதிராசாவை தொடர்பு கொண்டு அதன் பிறகு அனந்தியின் வீட்டுக்கே மாவை அண்ணரை அழைத்துச்சென்று அனந்திசசிதரனுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினராக்க பின்னேயும் முன்னேயும் பக்கத்திலும் இருந்து சிறீதரன் உழைத்ததாக சொல்லப்படுகின்றது.
பிறகு அனந்திசசிதரன் சிறீதரனோடு கண்ணக்கட்டி கோபம் போட்டுவிட்டார். ஏனென்று தெரியவில்லை.சிறீதரனின் தனிப்பட்ட ஒழுக்கங்கள் காரணமாகவும் இருக்கலாம்.
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த பின்பு பொன்.காந்தன் வேழன் ஆகியோர் குற்றமற்றவர்களா கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
இவர்களின் விடுதலைக்கு சட்டத்தரணியும் பா.உறுப்பினருமான சுமந்திரன் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவரசாசா ஆகியோரின் மனிதாபிமானமும் பங்கும் அளப்பரியது.
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிந்தபின் சிறீதரன் இரணைமடு தண்ணீர்பிரச்சனையில் வடக்கு முதலமைச்சரோடு மோதி பின்பு முதலமைச்சரின் சால்வையாக மாறத்தொடங்கினார்.
காரணம் முதலமைச்சர் மீதான விசுவாசம் அல்ல.கூட்டமைப்பை முதலமைச்சர் தலைமையில் உடைத்து அதில் தான் ஒரு முக்கிய பதவியை பெற்றுக்கொள்வது.
இதற்காக திரு.சம்மந்தர் சுமந்திரன் ஆகியோருக்கும் முதலமைச்சருக்கும் ஏற்பட்ட முறுகல்நிலையை பயன்படுத்தி அதில் முதலமைச்சர் பக்கம் நின்று இலாபம் உழைக்கலாம் என்று பார்த்த சிறீதரன் பின்பு பாராளுமன்ற தேர்தல் வர இருந்த நிலையில் குத்துக்கரணம் அடித்த ஆசனம் பெறுவதற்காக கொஞ்சம் சம்மந்தர் பக்கம் சாய்வதுபோல இருந்தார்.
ஆசன ஒதுக்கீடு முடிந்தவுடன் தன்னுடைய பிரச்சார மேடைக்கு முதலமைச்சரை அழைத்துவர கடுமையாகமுயன்றபோதும் முடியவில்லை.
எனவே தன்னுடைய துண்டுப்பிரசுரங்களில் முதலமைச்சரும் தானும் அருகருகே வருவதுபோல வடிவமைக்கும்படி தன் அலுவலக பணியாளர்களுக்கு பணித்திருந்தார்.
அப்பொழுது பொன்.காந்தன் முதலமைச்சரும் சிறீதரனும் அருகருகே வருபோல ஒரு துண்டுப்பிரசுரத்தை வடிவமைப்பித்து அதில் மேல் மூலையில் சிறிய அளவிலான தந்தை செல்வா படத்தையும் சம்மந்தரின் படத்தையும் இணைத்திருந்தார்.
இதை பார்த்த சிறீதரன் செல்வா சம்மந்தரின் படத்தை சுட்டிக்காட்டி இந்த பு…டை மக்களின் படத்தை போட்டால் எனக்கு வாக்கு விழுறதில்லையா உங்களுக்கு விசரா என்று பொன்.காந்தன் மீது பாய்ந்தாராம்.
சிறீதரனின் பித்தலாட்டங்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து கண்டுவந்த பொன்.காந்தன் சிறீதரனின் மேடையை தனக்கு சார்பான மேடையாக பயன்படுத்தியுள்ளார்.
இதே வேளை கடந்த தேர்தலில் சிறீதரனின் இன்னொரு காய் நகர்த்தலை செய்திருந்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு பாரிய அலை மக்கள் மத்தியில் வீசிக்கொண்டிருந்த சூழலில் அந்தக் கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கலாம் என்பது சிறீதரனின் முட்டாள் கணக்கு.
முதலில் கோகிலவாணி என்ற தன்னுடைய பணியாளரை இவர் முன்னாள் போராளி அவரை மாவை அண்ணரிடம் ஆசனம் கேட்ட அனுப்பினார்.ஆசனம் கொடுக்கப்பட்டிருந்தால் கோகிலவாணிக்கும் தனக்கும் சேர்த்து வேலை செய்து பின் இருவரும் கட்சியை விட்டு விலகி தமிழ்தேசிய மக்கள் முன்னணியோடு இணைவது. இல்லையெனில் கோகிலவாணியை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஊடாக ஆசனம் பெறவைப்பது.
இந்த நகர்த்தலை பொன்.காந்தன் உள்ளிட்ட யாருமே அறிந்திருக்கவில்லை.ஆனால் கடைசியில் சிறீதரன் வென்றார் ஆனால் பொன்.காந்தனின் பேச்சுக்கள் சிறீதரனின் கூட்டமைப்பை சிதைக்கும் வேலைகளுக்கு இடையூறாக போயிருந்தது.
இதே வேளை சிறீதரனை புகழ்ந்து பாட்டொன்று எழுதித்தரும்படி பொன்.காந்தனிடம் கேட்கப்பட்டது என்றும் அதற்கு இவரென்ன பிரபாகரனா? என பொன்.காந்தன் கேட்டதாகவும் இதையறிந்த சிறீதரன் கடுப்பாகியதாகவும் அறியமுடிகின்றது.
இதே வேளை ஆசனப் பகிர்வின்போது முன்னாள் போராளிகள் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்டவேளை அதில் தலை நுழைத்த சிறீதரன் “உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் குப்பி கடித்து இறந்துவிட்டார்கள்” என கருத்துத்தெரிவித்து ஊடகங்களின் பலத்த எதிர்ப்பை சந்தித்த வேளை வழமைபோலவே தனது குடும்ப ஊடகம் மூலம் அதை மறுத்திருந்தார் சிறீதரன்.
ஆனால் அவர் சொன்னது உண்மைதானென்று சிறீதரனிடம் வெளியேறியுள்ள பொன்.காந்தன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதே வேளை தன்னிடம் வரும் வெளிநாட்டு ராஜதந்தரிகளிடம் புலம் மக்களின் போராட்டங்கள் புலிக்கொடி ஏந்துவது தொடர்பாக எதிரான கருத்துக்களை கூறியிருப்பதும் உறுத்திப்படுத்தப்படுகின்றது.
சிறீதரனின் இந்த நடிவடிக்கைகள் காரணமாக அதிருப்தி அடைந்திருந்த பொன்.காந்தன் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன் சிறீதரனின் பணிகளில் இருந்து விலகியிருந்தார் கட்சிப்பணிகளில் இருந்தார்.
பின் புதிய அரசியலமைப்புக்கான கருத்தறியும் கூட்டத்திற்கு பொன்.காந்தன் சென்றிருந்தார்.
அங்கு தமிழீழம் என்ற அடித்தளத்தில் இருந்தே புதிய அரசியல் அமைப்பு கட்டியெழுப்பப்படவேண்டும் என்ற கருத்தை சிறீதரன் மறுத்து தமிழீழக் கோரிக்கையை கொச்சை படுத்திய நிலையில் சிறீதரனுக்கும் பொன்.காந்தனுக்கும் இடையில் பனிப்போர் பகிரங்க போராக வெடித்த நிலையில் சகல மக்களுக்கும் இந்த கட்டுரை முக்கியமானது.
சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்
கிளிநொச்சியை வசித்த தன் குடும்பத்தை பா.உறுப்பினர் ஆனவுடன் யாழ்ப்பாணத்தில் வீடெடுத்து மாற்றினார் மனைவிக்கு பாராளுமன்றத்தால் வழங்கப்படும் பதவியை எடுத்துக்கொடுத்து வீட்டில் இருத்தினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான இடைவெளியில் மனைவி வட்டக்கச்சி ம.விக்கு கற்பிக்க வேண்டிய சூழல் வந்தபோது இரண்டு மாதங்களுக்காக கல்வியங்காட்டுக்கு இடமாற்றம் செய்து கொண்டார்.
சிறீதரனின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். சென்னையில் ஒரு வீட்டோடு காணி வாங்கியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதை சிறீதரன் விரும்புவது இல்லை.
அப்படி அவர்கள் வந்து நடவடிக்கையில் ஈடுபட ஒத்துழைப்பவர்கள் தேசத்துரோகிகள்.
இதன் காரணமாக கடந்த ஐந்து வருடத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்தி நிதியை பெறமுடியாமல் போய்விட்டது. ஆனால் சிறீதரனால் சந்திரகுமாரை எதுவும் செய்ய முடியவில்லை.
தற்பொழுது சந்திரகுமாருக்கு கிளிநொச்சியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. சிறீதரனின் ஆளுமையின்மை அதற்கு காரணம்.
சிறீதரனிடமிருந்து பொன்.காந்தனின் பிரிவும் ஈ.பி.டி.பியில் இருந்து சந்திரகுமார் பிரிவும் சிறீதரனுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நன்றி
– வன்னியன் – இலக்கியா