பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர்கள் உள்பட 81 பயணிகளுடன் நேற்று பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு கிளம்பிய விமானம் கொலம்பியாவின் மெடலின் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் உள்ள 81 பேர்களின் கதி என்ன என்ற பதட்டத்துடன் அனைவரும் இருந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செய்தி வெளிவந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்தில் ஐந்து பேர் உயிர் பிழைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூவர் கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் இறந்து விட்டதாகவும் இவர்களில் 25 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.