கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சக்கரை, உப்பின் அளவு கூடுவது ஏன்?

“சிலருக்கு ஒபிசிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம்

அல்லது குறையலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சர்க்கரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில்

இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு.

கருவில் இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறைப்பிரசவம், அல்லது

கருப்பையில் குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக இரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது குறைப்பிரசவம் ஏற்பட

வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத்துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரிடார்டேஷன் என்பார்கள்.

மேலும்

துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ராயூட்டரின்

டெத் என்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து செக் அப் செல்ல தயங்கக்கூடாது. வயிற்றில்

இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர்க்காமல்

இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.