மந்திரவாதி பிடியில் தவிக்கும், நடிகை

மந்திரவாதியின் பிடியில் சிக்கி தவிக்கும், நடிகை பாபிலோனாவை மீட்கக்கோரி, அவரது பாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை, சாலிகிராமம், புஷ்பா காலனியைச் சேர்ந்தவர், கிருஷ்ணகுமாரி, 80. அவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: தை பிறந்தாச்சு என்ற படத்தில், பாபிலோனா அறிமுகமானாள். நான் தான், அவளை சினிமாவில் நடிக்க வைத்து, புகழ் பெறச் செய்தேன். அவளை, ஆரணியைச் சேர்ந்த, திருமணமான சுந்தர் பாபுல்ராஜ் என்பவர், மாந்திரீகம் மூலம் வசியம் செய்து, தன் வயப்படுத்தி உள்ளார். அவன், கைப்பாவை போல், அவளை ஆட்டிவித்து வருகிறான். அவனது பிடியில் இருந்து, மீள முடியாமல் தவிக்கிறாள். அவளை விடுவிக்குமாறு, சுந்தர் பாபுல்ராஜிடம் கேட்டேன்; கொலை மிரட்டல் விடுத்தான். அவன் மீது நடவடிக்கை எடுத்து, என் பேத்தியை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.

யார் அந்த பாபுல்ராஜ்? : சென்னையில், சுந்தர் பாபுல்ராஜ் நடத்தி வரும், உடற்பயிற்சிக் கூடத்திற்கு, பாபிலோனா சென்று வந்துள்ளார். அப்போது, இருவரும் காதல் வயப்பட்டு, 2015ல், திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.