எல்லா மனிதர்களும் வாழ்நாள் முமுவதும் எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ தான் ஆசைப்படுவார்கள்.
ஒருவருக்கு எந்த வித நோய்களும் சொல்லி விட்டு வருவதில்லை, மாறி வரும் காலகட்டத்திலும், உணவு முறைகளாலும் சாதாரணமாக இருப்பவர்களுக்கு கூட திடீரென நோய்கள் வருகிறது.
நாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோமா என சில விடயங்களை வைத்தே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா?
சரியான நேரத்தில் தினம் எழுவது
உடலுக்கு ஓய்வு முக்கியம், ஒருவர் அலாரம் போன்றவைகளை வைக்காமலேயே தினம் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தாலே அவர் சரியான அளவு தூங்குவதாகவும் அவர் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்வதாகவும் அர்த்தமாகும்.
மன உளைச்சல் போன்ற விடயங்களால் சரியாக தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.
சிறுநீர் கழித்தல்
உடலிலிருந்து தினம் சரியான அளவு நீர் வெளியேற வேண்டியது அவசியமாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல சிறுநீரானது தெளிந்த மஞ்சள் (Tranparent Yellow) நிறத்தில் வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.
விரல் நகம்
விரல் நகங்களை வைத்து கூட ஒருவர் ஆரோக்கியத்தை கணிக்கலாம். ஆரோக்கியமாக இருப்பர்களின் விரல் நகமானது மென்மையான மேற்பரப்புடன் இளம் சிவப்பு (Pink) நிறத்தில் இருக்கும்.
கண்கள்
கண்களை பொருத்தவரை கருப்பு கருவிழிகளுடன், வெள்ளை படர்ந்து எப்போதும் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் ஆவர்.
கண்களானது வெள்ளை நிறத்திலிருந்து திடீரென மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ மாறினால் உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.
நாக்கின் நிறம்
மெல்லிய வெள்ளை நிறத்தில் நாக்கு இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.
சிவப்பு சிறத்தில் இருந்தால் வைட்டமின் பி குறைப்பாடு உள்ளதாகவும், நாக்கு அடிக்கடி வரட்சி அடைந்தால் அவர்களுக்கு மனழுத்தம் இருப்பதாகவும் அர்த்தமாகும்.
இதய துடிப்பு
ஒரு சாதாரண ஆரோகியமான மனிதனின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 72லிருந்து 80 வரை இருக்கலாம்.
80 க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன் சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.
சரியான திட்டவிட்ட உணவுகளை உண்ணுவதுடன், மருத்துவர்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சென்று உடலை பரிசோதனை செய்து கொண்டால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம்.