பெண்கள் கடைபிடிக்கும் பங்குனித் திங்கள் விரதம்

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பங்குனி மாதம் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அன்றைய தினம் பெண்கள் நோன்பிருந்து அபிராமி, அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பாராயணம் செய்தால் நல்லது. இப்படிச் செய்தால் சகல செல்வங்களும் பெற்று வாழ்வர்.

உத்திரத்தன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். ஆலயம் சென்று சிவனை வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய நலம் வரும். கணவர்களின் துன்பம், நீங்காத நோய்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி குதூகலம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கி அன்பு வளரும்.