மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
அதில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவிகள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவயிடத்திற்கு தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயினால் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.