ஊடகவியலாளர்களுக்கென அறிமுகமாகும் புதிய சட்டம்!

ஊடகவியலாளர்களின் தொழில் கோரிக்கை தொடர்பில் இயலுமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் விதத்திலான சட்டங்கள் மற்றும் அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மஹவெலி கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சில காலம் ஊடகவியலாளராக செயற்பட்ட தமக்கு ஊடகவியலாளர்களின் அனுபவம் குறித்த போதிய தெளிவைக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.