தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த 25 தேதி முதலே உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1 மாதமாக எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அவருடன் ராஜாத்திஅம்மாள், ஸ்டாலின், பொன்முடி, தயாநிதிமாறன் ஆகியோர் உடன் இருப்பதாக கூறப்படுகிறது.