அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பரபரப்பான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கத்தை மர்ம நபர் ஒருவர் அள்ளிச் சென்றுள்ளார்.
நியூயார்க்கின் மிகவும் பரபரப்பான மன்ஹாட்டன் பகுதியில் குறித்த துணீகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தங்க கட்டிகளை எடுத்துச் செல்லும் வாகனத்தை அதன் சாரதிகள் 48 மேற்கு தெருவில் நிறுத்தி வைத்துக் கொண்டு தங்களது கைப்பேசியை சீர் செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவகையில் மர்ம நபர் ஒருவர் குறித்த வாகனத்தில் இருந்து 86 பவுண்டுகள் எடை கொண்ட தங்க கட்டிகள் நிரப்பியிருந்த பக்கெட் ஒன்றை எடுத்துக்கொண்டு விரைந்துள்ளார்.
கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு 1.6 மில்லையன் டொலர் (ரூ.23,79,280,00 இலங்கை மதிப்பு) என்று தெரிய வந்துள்ளது.
குறித்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகளை வெளியிட்டு பொலிசார் குறித்த கொள்ளையனை வலை வீசித் தேடி வருகின்றனர்.
தங்கத்தை கொள்ளையிட்டு சென்ற நபர் அந்த பக்கெட்டின் கனம் தாளாமல் தரையில் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுப்பதும், மீண்டும் அந்த பக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓட்டமெடுப்பதாகவும் உள்ளது.
இதனிடையே குறித்த பக்கெட்டில் என்ன உள்ளது என்பதை அறியாமல் குறித்த நபர் கொள்ளையிட்டு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். புளோரிடா மாகாணம் விட்டு குறித்த கொள்ளையன் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.