மாற்றத்துக்குள்ளாகும் விமான சேவை சட்டம் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பவர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற முறையாக அனுமதி பெறாது போக்குவரத்து வசதிகளை வழங்குதல்

போன்ற சட்ட விரோத செயற்பாடுகளினால் பயணிகள் மாத்திரமல்லாமல் விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனங்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன.

இந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய சட்டத்தில் போதியளவு விதிமுறைகள் காணப்படாத காரணத்தினால் விமான நிலைய வளாகத்தில் பல்வேறு நபர்களினால் மேற் கொள்ளப்படும் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பதை தடுப்பதற்காக

2010ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சிவில் விமான சேவை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.