இயற்கையின் சீற்றம் அன்மித்து விட்டது!! வடக்கு மக்களிற்கு அவசர செய்தி விரைவாக பகிருங்கள்….

வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும்.

அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது.

சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும் தொலைத்தொடர்புச் சேவைத் தடைகளை மனதிற் கொண்டு பின்வரும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

38 வாரங்கள் (9மாதத்திற்கு) அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பகாலம் உள்ள கர்ப்பவதிகள் மற்றும் பிறந்து ஒருமாதத்திற்கு உட்பட்ட வயதுடைய பச்சிளம் பாலகர்கள் ஆகியோர் அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருப்பது பாதுகாப்பானது.

மேலும் எவராவது கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் தத்தமது பகுதிகளில் வெள்ள அபாயம் அல்லது போக்குவரத்துத் தடை நேரிடும் என எண்ணினால், அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தற்காலிகமாகத் தங்கமுடியும்.

கொதித்தாறிய நீரைப்பருகுவதையும் உணவு அருந்துமுன் கைகளைக் கழுவிக்கொள்வதையும் தவறாது கடைப்பிடிக்கவும். தற்காலிகமாக நீங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கநேரிட்டால் உங்கள் பகுதி சுகாதார வெளிக்களப் பணியாளர்களுக்கு (Public health filed officers) அல்லது 0770212765 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அத்தகவலைத் தெரிவியுங்கள்.

அவசரகால நிலைமைகளில் உதவிகோரி உங்களது பகுதி சுகாதார மருத்துவ மாது (Public health midwives), பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (Public Health Inspector) அவர்களுக்கோ அல்லது பின்வரும் இலக்கங்களுக்கோ எந்த நேரத்திலும் அழைப்பினை ஏற்படுத்தலாம்.

கிளிநொச்சி மாவட்டம்

மாவட்ட சுகாதார அனர்த்த முகாமைத்துவ நிலையம்- 0243248197 அல்லது 0212285931.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை-0212285328

கண்டாவளைப் பிரதேசம்
பிரதேச வைத்தியசாலை தருமபுரம்-0212060469
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை-0212060415
பளைப் பிரதேசம்
பிரதேச வைத்தியசாலை பளை-0212050025
பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை-0212050024

பூனகரிப் பிரதேசம்
முழங்காவில் ஆதார வைத்தியசாலை-0243244010
பூனகரி பிரதேச வைத்தியசாலை-0212060854
பூனகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை-0212060822
வேரவில் பிரதேச வைத்தியசாலை-0243247238
ஜெயபுரம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகு-0717574197

கரைச்சிப் பிரதேசம்
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை-0770212765
அக்கராயன் குளம் பிரதேச வைத்தியசாலை-0774332446
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை 0212283823

மாவட்ட சுகாதார அனர்த்த முகாமைத்துவ நிலையம்