தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த நாடா சூறாவளி, காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இது வடக்காக நகர்ந்து தமிழகத்தில் தரை தொடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.