பொதுவாக சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துதான் அதிக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் மனச்சோர்வு குறைவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லேன்காஸ்டர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆய்வில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பலர் மனச்சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களால் நல்லது, கெட்டது என இரண்டுமே உள்ளது என்றும், அதை பயன்படுத்தும் விதம் மற்றும் முறை ஆகியவைகளை அதை தீர்மானிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.