கருணாவின் முயற்சி நீதிமன்றில் வெற்றி பெறுமா?

கருணா என்றழைக்கப்படும்  விநாயகமூர்த்தி முரளிதரன்  தற்பொழுது  அரச வாகனத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில்  வரும் 7ம் திகதிவரை விளக்க மறியலில் நேற்று முன் தினம் முதல் வைக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயமே. எனினும்  சிறைச்சாலையில் தனக்கு உயிர் ஆபத்து இருப்பதாக காரணம் காட்டி பிணை மனு ஒன்றை  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கருணாவின் சார்பில் அவரின் வழக்கறிஞர் குறித்த மனுவை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

கருணாவுக்கு சிறைச்சாலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், குறித்த வாகனத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு மீண்டும் கையளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் குறித்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த காரணத்தால் கருணாவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.