வயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால், அதனால் பல தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே வயிற்று அல்சர் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கீழே ஒருவருக்கு அல்சர் இருந்தால் தென்படும் சில பொதுவான ஆரம்ப அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த அறிகுறிகள் உங்கள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்து வாருங்கள்.
வயிற்று வலி
வயிற்றின் மேல் பக்கத்தில் கடுமையான வலியை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு அல்சரின் ஆரம்ப கட்டத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். முக்கியமாக அல்சர் இருப்பின், நடுராத்தியில் தூங்க முடியாத அளவில் வலியை உணரக்கூடும்.
நெஞ்செரிச்சல்
அல்சர் இருப்பவருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும். மேலும் இரவு நேரத்தில் நம்மை நச்சரிக்கும் படியான எரிச்சல்மிக்க வலியையும் சந்திக்கக்கூடும்.
குமட்டல்
வயிறு காலியாக இருக்கும் போது குமட்டல் உணர்வை சந்திப்பீர்கள் மற்றும் எந்நேரமும் வயிறு உப்புசத்துடன் இருப்பதை உணர்வீர்கள்.
மலத்தில் இரத்தம்
ஒருவேளை அல்சர் முற்றிய நிலையில் இருந்தால், மலம் கழிக்கும் போது இரத்தம் கலந்து அல்லது கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும். எனவே இந்நிலையில் கவனமாக இருங்கள்.
சோர்வு
சில நேரங்களில் அல்சர் இரத்த சோகையை உண்டாக்கும். எனவெ வயிற்று அல்சர் இருக்கும் போது, எந்நேரமும் மிகுந்த சோர்வை உணர நேரிடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.